ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.
திருமால்பூர் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், சூர்யா என்கின்ற தமிழரசன், விஜயகணபதி ஆகியோர் மீது, அதே பகுதியை சேர்ந்த பிரேம் குமார் மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சூர்யா, விஜயகணபதி ஆகியோர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சூர்யா கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல், சொந்த ஊருக்கு வந்தடைந்தது. இளைஞரின் உடலை பார்த்து உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.