விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பாஜகவின் முழு முயற்சியால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் கை விடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
டங்ஸ்டன் விவகாரத்தில் முதலில் அமைதியாக இருந்த திமுக, மக்கள் எதிர்ப்பை அடுத்து அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது எனவும் டிடிவி தினகரன் கூறினார். மேலும், டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டதற்கு முழு காரணமும் பாஜகவையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.