மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்ததாக மதுரை ஆதினம் குற்றம்சாட்டியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலியிட போலீசார் அனுமதி மறுத்த விவகாரம் பூதாகரமாகியது. இதனையடுத்து எம்.பி நவாஸ்கனி அங்கு சென்று அசைவ உணவு சாப்பிட்ட விவகாரத்துக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின.
இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல முயன்ற மதுரை ஆதினத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பாக பேசிய மதுரை ஆதினம், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே மதுரை ஆதீனத்தை திருப்பரங்குன்றம் மலை மீது ஏற விடாமல் காவல்துறையினர் தடுத்ததை கண்டித்து இந்து அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.