மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 73 பேருக்கு அரிய வகை நரம்பியல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புனேவில் உள்ள 3 மருத்துவமனைகளில் 73 பேருக்கு குய்லின்-பார் சிண்ட்ரோம் என்ற நரம்பியல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நோய்த்தொற்று பரவி வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேம்பிலோபாக்டர் எனும் பாக்டீரியாவால் இந்த பாதிப்பு பரவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.