புஷ்பா 3 படத்தில் ஜான்வி கபூர் ஒரு பாட்டுக்கு நடனமாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா, புஷ்பா 2 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்துள்ளன.
புஷ்பா முதல் பாகத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தாவும், புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலாவும் நடனமாடியிருந்தனர்.
இந்நிலையில், அதன் 3ஆம் பாகத்தில் இடம்பெறும் கவர்ச்சி பாடலுக்கு ஜான்வி கபூர் பொருத்தமாக இருப்பார் என இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.