நடிகர் அஜித்குமார் உட்பட 19 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருது 7 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த மருத்துவர் துவ்வூர் நாகேஷ்வர் ரெட்டி, சண்டிகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீஜெகதீஷ் சிங் கெஹர், கலைத் துறையில் குஜராத்தைச் சேர்ந்த குமுதினி ரஜினிகாந்த் லக்கியா, கர்நாடகவைச் சேர்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயணா சுப்பிரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பீகாரைச் சேர்ந்த சாரதா சின்ஹா, எழுத்தாளர் வாசுதேவன் நாயர் ஆகியோருக்கு அவர்களின் மறைவுக்கு பிறகு பத்ம விபூஷன் விருது வழக்கப்பட உள்ளது.