பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
பத்ம விருது பெறுபவர்களின் அசாதாரண சாதனைகளை இந்தியா கவுரவிப்பதிலும் கொண்டாடுவதிலும் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். விருது பெறும் ஒவ்வொருவரும் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் புதுமைக்கு ஒத்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது எண்ணற்றவர்களை நேர்மறையாக பாதித்துள்ளதாகவும், சிறந்து விளங்க பாடுபடுவது மற்றும் தன்னலமின்றி சமூகத்திற்கு சேவை செய்வதன் மதிப்பை அவை நமக்குக் கற்பிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.