76வது குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசுத் தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தில், மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் புத்தகத்திலும் அவர் கையெழுத்திட்டார்.