புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா விழாவில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றிவைத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய காவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அரசு துறைகளின் அலங்கார அணிவகுப்பு ஊர்தியை கண்டு ரசித்தார்.