தெப்பக்காடு யானைகள் முகாமில் தேசிய கொடி ஏற்றியபோது, யானைகள் தும்பிக்கையை உயரத்தி மரியாதை செலுத்தின.
குடியரசு தின விழாவை ஒட்டி முதுமலை தெப்பக்காடு யானைக்கள் முகாமில் வளர்ப்பு யானைகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டன. ஒவ்வொரு யானைகள் மேல் பாகன்கள் அமர்ந்து தேசிய கொடியை பிடித்தவாறு அமர்ந்தனர்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, தேசிய கொடியை ஏற்றி வைத்தபோது, யானைகள் அனைத்தும் தும்பிக்கையை தூக்கி பிளிரி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தி. மேலும், வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.