கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து பரவியதை விட, சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ.-வின் தலைவராக ஜான் ராட்க்ளிஃப் பதவியேற்றார்.
இவர் பதவியேற்ற உடனேயே, கொரோனா வைரஸ் பரவல் குறித்த அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையின்படி. கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதை விட, சீன ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியானதல்ல என்றும், ட்ரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தின் போது தயார் செய்யப்பட்ட அறிக்கை தற்போது வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.