பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் கூட திமுக ஊழல் செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சூழியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர்,
நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு தனது தொகுதியில் ஒரு புதிய தொழிற்சாலையாவது கொண்டு வந்தாரா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், வரும் தேர்தலில் பட்டியல் சமூக மக்களின் ஒரு வாக்கு கூட திமுகவுக்கு கிடைக்காது என மா.ஃபா.பாண்டியராஜன் தெரிவித்தார்.