பெரம்பலூர் அருகே ஊராட்சி நிதியை கையாடல் செய்ததாக பெண் கிளர்க் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி நொச்சிகுளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது வரவு செலவுகளை கணக்கீடு செய்ததில் 78 ஆயிரம் ரூபாயை ஊராட்சி செயலாளர் பானுமதி கையாடல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் நேரில் விசாரணை நடத்தி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனிடையே பானுமதியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.