சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருந்தாலும் மதம் ஒன்று எனவும் அந்த மதம் சனாதன தர்மம் எனவும் கூறினார்.
சனாதன தர்மத்தை விமர்சித்தவர்கள் கும்பமேளாவை பார்க்க வருமாறு அழைப்பு விடுத்த யோகி ஆதித்யநாத், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா எந்தவொரு சாதி, மதத்திற்கு உட்பட்டது அல்ல எனத் தெரிவித்தார்.