உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் நகரில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் நகரில் இயல்பைவிட பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.
வெப்ப நிலை 8 டிகிரி செல்சியஸ் வரை குறையும் நிலையில், கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.