பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.
தஞ்சை திருவிடைமருதூர் அருகே மதமாற்ற பிரச்சாரத்தை தடுத்ததற்காக பாமக பிரமுகர் ராமலிங்கம் 2019ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு NIA வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கொலையில் தொடர்புடைய அப்துல் மஜீத் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவரை NIA அதிகாரிகள் கைது செய்தனர். சென்னையில் கைதான இருவரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.