தனக்கு இருப்பது இந்திய டி.என்.ஏ. தான் என மருத்துவ பரிசோதனையில் முடிவுகள் வந்துள்ளதாக இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நகைச்சுவையாக தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்திலும், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், மருத்துவ பரிசோதனையில் தனக்கு இருப்பது இந்திய டி.என்.ஏ. என முடிவுகள் வந்துள்ளதாகவும், இந்திய இசையை கேட்கும்போதெல்லாம், தான் நடனமாடத் தொடங்கி விடுவதாகவும், நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
இந்தோனேஷிய அதிபரின் பேச்சைக்கேட்டு, பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் உள்பட அங்கிருந்த அனைவரிடையே சிரிப்பலை எழுந்தது.