விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டு கொல்ல கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அரசு அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு அளித்து வந்தனர்.
ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் நிலவியது.