சீனாவில் 2 கோடி ரூபாய் இழப்பீடு தருவதாக கூறியும், அரசுக்கு வீட்டை விற்க மறுத்து பிடிவாதம் பிடித்த முதியவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டு அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை அமைக்கும் இடத்தில் வசித்த மக்கள், அரசு அளித்த பெருந்தொகையை பெற்றுகொண்டு காலி செய்தனர்.
ஆனால், ஹுவாங் பிங் என்ற முதியவர் மட்டும் தன்னுடைய 2 மாடி வீட்டை அரசுக்கு விற்க மறுத்துவிட்டார். 2 கோடி ரூபாய் நஷ்டஈடு, வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் என்ற அரசின் நிவாரணத்தை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடித்ததால், தாத்தாவின் வீட்டை நடுவில் விட்டு விட்டு இருபக்கமும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்த வீட்டில் வசிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக முதியவர் வேதனை தெரிவித்துள்ளார்.