வயநாட்டில் பழங்குடியின பெண்ணை கொன்ற புலி, நான்கு நாட்களுக்கு பின் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
கேரள மாநிலம், வயநாடு மானந்தவாடி அருகே விவசாய நிலத்தில் காபி கொட்டையை அறுவடை செய்தபோது புலி தாக்கியதில் ராதா என்பவர் உயிரிழந்தார்.
வனவிலங்கு தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண கோரி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காப்பி தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆட்கொல்லி புலி சுட்டுக் கொல்லப்படும் என தலைமை வனவிலங்கு காப்பாளர் அறிவித்தார்.
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், பெண்ணை தாக்கி கொன்ற புலி நான்கு நாட்களுக்கு பின்பு காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த ஆட்கொல்லி புலி மற்றொரு புலியுடன் சண்டையிட்டு உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ள நிலையில், கிராமத்தில் நடமாடும் மற்றொரு புலியை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கிராமத்தில உலா வரும் மற்றொரு புலியை ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.