தமிழகத்திற்கு தேவையான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியை விடுவிக்க கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தார்.
அப்போது தமிழகத்திற்கு தேவையான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பில் தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழியும் உடனிருந்தார்.