ஈரோட்டில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடலுக்கு ரஷ்ய நாட்டு கலைஞர்கள் நடனமாடி அசத்தினர்.
திண்டல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்தியா – ரஷ்யா இடையிலான கலாச்சார நட்புறவை மேம்படுத்தும் வகையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டல் ரோட்டரி கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ரஷ்ய நாட்டுக் கலைஞர்கள் இந்திய கொடியை ஏந்தி வருகை தந்தனர். தொடர்ந்து இளையராஜாவின் இசைக்கு நடனமாடி அரங்கில் இருந்த பார்வையாளர்களை ரஷ்ய நாட்டு கலைஞர்கள் வியப்பில் ஆழ்த்தினர்.