சென்னை பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்தில் அறக்கட்டளை நிர்வாகிகள் தலையிடுவதை கண்டித்து அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பச்சையபன் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அறக்கட்டளை நிர்வாகிகள் பிரச்சினையை ஏற்படுத்துவதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தில், அறக்கட்டளை நிர்வாகிகள் தலையிடுவது பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் 6 கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வகுப்புக்குள் அனுப்பி வைத்தனர்.