உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது.
இந்நிலையில், பொது சிவில் சட்டம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்குப் பின் கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.