சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த மக்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேங்கை வயல் வழக்கில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த 3 பேர் தான் குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிபிசிஐடியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வேங்கை வயல் கிராம மக்கள், 3வது நாளாக கருப்பு கொடி கட்டி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.