செல்போன் இருந்தாலே போதும் : HIDDEN CAMERA-வுக்கு இனி பயப்பட வேண்டாம்!
Jul 23, 2025, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

செல்போன் இருந்தாலே போதும் : HIDDEN CAMERA-வுக்கு இனி பயப்பட வேண்டாம்!

Web Desk by Web Desk
Jan 27, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் HIDDEN CAMERA-க்களை எளிய முறையில், நமது செல்போன்களை பயன்படுத்தியே கண்டுபிடித்து விடலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!

தொலைதூர பயணங்களின்போது முன்பின் தெரியாத ஊரில் உள்ள விடுதிகளில், அறையெடுத்து தங்கும்போது, வணிக வளாகங்களில் உள்ள துணிக்கடைகளில், நாம் வாங்கும் துணிகளை TRIAL பார்க்கும்போது, அவசரகதியில் பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும்போது என பல தருணங்களில் நமது பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது HIDDEN CAMERA-க்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

பொதுமக்களின் தனியுரிமையை பறிக்கும் HIDDEN CAMERA-க்களை பொருத்துவது சட்டவிரோதம் என்றபோதிலும், மோசடி செயல்களுக்கு உதவியாக அவைகளை மோசடி நபர்கள் பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் வாடிக்கையாகிவிட்டது.

இந்த சூழலில் நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு, தனியுரிமை பறிக்கப்படும் இடத்தில் முரண்பாடுகளை கண்டறிந்து களையெடுப்பது அத்தியாவசியமாகிறது. அதனடிப்படையில், எளிதாக HIDDEN CAMERA-க்களை கண்டறியும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் மார்க்கெட்டுகளில் வந்திருப்பது உண்மைதான்.

ஆனால், அதையெல்லாம்தாண்டி நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆண்டிராய்டு செல்போன்களை பயன்படுத்தியே அவற்றை கண்டறியலாம் என்றால் அது இன்னும் எளிமையான வழியல்லவா?

ஆம், பதுக்கி வைக்கப்படும் HIDDEN CAMERA-க்களை நமது ஆண்டிராய்டு செல்போன்களை பயன்படுத்தியே எளிய முறையில் கண்டுபிடிக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதற்கான சரியான வழிகளை தெரிந்து வைத்திருப்பதுதான் அவசியம் என கூறும் அவர்கள், செல்போன்களை பயன்படுத்தி HIDDEN CAMERA-க்களை கண்டுபிடிக்கும் 4 முக்கிய வழிமுறைகளையும் எடுத்துரைத்துள்ளனர்.

அதில் மிக எளிமையான வழி செல்போன் FLASH LIGHT-களை பயன்படுத்தி HIDDEN CAMERA-க்களை கண்டுபிடிப்பது. அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் FLASH LIGHT-ஐ அடிக்க வேண்டும். அப்போது அங்கு HIDDEN CAMERA இருந்தால் FLASH LIGHT-ன் வெள்ளை ஒளி LENS-ல் பட்டு பிரதிபலிப்பதை வைத்து அவற்றை கண்டறியலாம்.

HIDDEN CAMERA-க்கள் மனித கண்களுக்கு புலப்படாத INFRA RED ஒளியை வெளிப்படுத்தும். ஆனால் நமது ஆண்டிராய்டு செல்போன்களில் உள்ள கேமராக்களை பயன்படுத்தி அவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும். அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு சந்தேகத்திற்கிடமான பகுதிகளை கேமரா மூலம் பார்த்தால், அங்கு HIDDEN CAMERA இருக்கும் பட்சத்தில் அதன் INFRA RED ஒளி கேமராவில் தென்பட்டுவிடும்.

மற்றோருபுறம் WIRELESS கருவிகளாக பயன்படுத்தப்படும் HIDDEN CAMERA-க்களுக்கு இணைய சேவை அவசியம் என்பதால், அங்குள்ள WIFI நெட்வொர்க்குகளுடன் அவை கட்டாயம் இணைக்கப்பட்டிருக்கும். எனவே உங்கள் செல்போன்களில் உள்ள WIFI வசதி மூலம் அருகாமையிலுள்ள இணைப்புகளை SCAN செய்து, அதில் தென்படும் எண்கள் மற்றும் சின்னங்களில் தொடங்கும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

அதேபோல, HIDDEN CAMERA-க்களை கண்டறிய உதவும் பல செயலிகளும், தற்போது ஆண்டிராய்டு மற்றும் IOS பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது என்பதால், அவற்றை பயன்படுத்தியும் HIDDEN CAMERA-க்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். குறிப்பாக DETECTIFY, HIDDEN IR CAMERA DETECTOR, HIDDEN SPY CAMERA FINDER PRO போன்ற செயலிகள் தொழில்நுட்ப வல்லுநர்களின் முக்கிய பரிந்துரைகளாக உள்ளன.

Tags: All you need is a cell phone: Fear no more HIDDEN CAMERA!HIDDEN CAMERAHIDDEN IR CAMERA DETECTORHIDDEN SPY CAMERA FINDER PRO
ShareTweetSendShare
Previous Post

டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் நடத்தி உள்ளார் : எல்.முருகன் பேட்டி!

Next Post

“உயிர் விடுவதை தவற வேறு வழி இல்லை” : முளைத்த பயிர்களால் மூழ்கிய வாழ்க்கை – கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகளின் அவலம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies