கோவையில் செயல்பட்டு வரும் சமஷ்டி சர்வதேச பள்ளியின் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
வரதையங்கார் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சமஷ்டி சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுவேதா மந்தேனா, முதல்வர் தீபா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மழலைகள் வண்ண வண்ண ஆடைகளை அணிந்துகொண்டு நடனமாடியது காண்போரின் கண்களை கவர்ந்தது.
இதனைத்தொடர்ந்து பேசிய பள்ளியின் முதல்வர் தீபா தேவி, சமஷ்டி சர்வதேச பள்ளியானது, அனைத்து மாணவர்களையும் பல்வேறு திறமைகளுடன் வளர்த்து வருவதாக தெரிவித்தார்.
புத்தக கல்வி மட்டுமல்லாது, விளையாட்டு, வாழ்க்கை கல்வி, தலைமைத்துவ திறன்கள் என அனைத்து துறைகளிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கல்வி கற்று வருவதாக தெரிவித்தார்.