ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 31ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர் சங்கம் முடிவு செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மீனவ சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் 34 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி வரும் 31ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.