ஐக்கிய அரபு அமீரகத்தில் புல்லட் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த இந்த ரயில், அபுதாபி முதல் துபாய் வரை இயக்கப்படுகிறது. இதன் மூலம் இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெறும் அரை மணி நேரமாக குறைந்துவிட்டதாக துபாய் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் நிலையில், அதை விட இரு மடங்கு வேகத்தில் புல்லட் ரயில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.