இஸ்ரேல், காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததால், வடக்கு காசாவை நோக்கி ஏராளமானோர் படையெடுத்தனர்.
பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதையடுத்து வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.
இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காசாவுக்கு திரும்புகிறார்கள். இதனால் கடற்கரையை ஒட்டிய பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தது.