டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடிபிடித்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் டெல்லி ஜங்புரா சட்டமன்ற தொகுதியில்,வழக்கறிஞர் அர்ஜூன்பால் சிங் மர்வா அவர்களோடு இணைந்து, பாஜக வேட்பாளர் திரு.தர்விந்தர் சிங் அவர்களை ஆதரித்து மாநகராட்சி வார்டு எண்-144 பகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.