வெள்ளை மாளிகைக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிப்ரவரி 4-ஆம் தேதி அதிபர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
















