இந்தியா தனது சொந்த ஜெனரேட்டிவ் AI மாடலை உருவாக்க உள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், AI கம்ப்யூட் வசதியால் ஜெனரேட்டிவ் AI மாடல் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
8 முதல் 9 மாதங்களில் ஜெனரேட்டிவ் AI மாடலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ள அஷ்வினி வைஷ்ணவ், AI ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.