NO CALL DROP : HIGH SPEED NET - வியப்பின் உச்சத்தில் கும்பமேளா பக்தர்கள்!
Jul 20, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

NO CALL DROP : HIGH SPEED NET – வியப்பின் உச்சத்தில் கும்பமேளா பக்தர்கள்!

Web Desk by Web Desk
Feb 1, 2025, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்ப மேளாவில் எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்டுள்ள தடையற்ற தொலைபேசி வசதி மற்றும் இணைய வசதியும் பெரும் ஆபத்தைத் தடுத்திருக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கடந்த கடந்த 13ம் தேதி கோலாகலத்துடன் தொடங்கியது.

45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளா, உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில், புனித நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக் ராஜ் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதுவரை 15 கோடிக்கும் மேலான பக்தர்கள் கும்ப மேளாவில் புனித நீராடியுள்ளனர்.

தை அமாவாசை நாளில், திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர்.

தடுப்புகளை மீறி பக்தர்கள் புனித நீராட சென்றதே நெரிசலுக்கு காரணம் என தெரிவித்துள்ள கும்பமேளா நிர்வாக அதிகாரி ஆகாங்ஷா ராணா, நிலைமை கைமீறிப் போய்விடவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

கங்கை நதிக்கரையின் படித்துறைகளுக்கு அருகிலிருக்கும் பக்தர்கள் அங்கிருந்தவாறே புனித நீராடுமாறுமாறு கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் யோகி ஆதித்தியநாத், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்த, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் பிரயாக் ராஜ் பகுதி முழுவதும் 53 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து தொலைத்தொடர்பு கோபுரங்களும் அனுமதிக்கப்பட்ட கதிரியக்க வரம்புகளுக்குள் செயல்படுவதை உறுதி செய்வதற்காக மின்காந்த கதிர்வீச்சு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுவான எச்சரிக்கை நெறிமுறைகளை வழங்க, ஒலிபரப்பு எச்சரிக்கை வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த தளம் தொடங்கப் பட்டுள்ளது. மகா கும்ப மேளா நடக்கும் பகுதி முழுவதும் 26 கிலோமீட்டருக்கு OPTICAL FIBRE போடப்பட்டுள்ளது. கூடுதலாக, 328 புதிய TOWER-கள் நிறுவப்பட்டுள்ளன.

தடையற்ற இணைப்பை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள 1,462 BTS அலகுகளுடன், கூடுதலாக, அனைத்து மொபைல் தொழில்நுட்பங்களிலும் மொத்தம் 575 புதிய BTS பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 92 கிலோமீட்டர் வரை ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OPTICAL FIBRE CABLE ) அதிவேக, நம்பகமான நெட்வொர்க் கவரேஜை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 78 Transportable Towers அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் அதிகமான இடங்களில், தொலை தொடர்பு சேவையை மேம்படுத்த 150 outdoor Small-cell solutions எனப்படும் அமைப்பையும் உருவாக்கி உள்ளனர்.

ஏற்கனவே உள்ள 340 தளங்களை மேம்படுத்தியுள்ள ஏர்டெல் நிறுவனம், புதிதாக 287 புதிய தளங்களை அமைத்துள்ளது. தடையற்ற இணைய சேவையை வழங்குவதற்காக கூடுதலாக 74 கிலோமீட்டருக்கு OPTICAL FIBRE CABLE அமைத்துள்ளது.

மேலும், பல கிலோமீட்டர் பரப்பளவுக்கு 78 active cell on wheels வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைள் மூலம், மகா கும்ப மேளா பகுதியில் மட்டுமின்றி நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், ஹோட்டல்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் தடையற்ற தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் உறுதி செய்கின்றன.

அவசர தகவல் தொடர்புகளுக்காகவும், எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் உடனடி பதிலை உறுதி செய்வதற்காகவும் மூன்று பேரிடர் மேலாண்மை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஏதேனும் எதிர்பாராத விபத்து போன்ற சம்பவம் ஏற்படும் நேரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க இந்த தடையற்ற தொலைபேசி பல சிக்கல்களைத் தீர்க்கிறது என்று பிரயாக் ராஜ் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: kumbh mela indiaprayagraj maha kumbh mela 2025Kumbh Melakumbh mela 2025 prayagrajMaha Kumbh MelaMahakumbh Mela 2025kumbh mela 2025NO CALL DROPmaha kumbh mela 2025HIGH SPEED NETkumbh mela historykumbhmela high speed internetprayagraj kumbh mela 2025kumbh mela prayagrajmaha kumbh mela at prayagraj in 2025prayagraj kumbh 2025
ShareTweetSendShare
Previous Post

வளர்ச்சியின் பாதையில் இந்தியா : மத்திய பட்ஜெட்டில் இடம்பெற போகும் அறிவிப்புகள் என்ன?

Next Post

குடியரசுத் தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

Related News

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

ஆடி கிருத்திகை – பழனி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பொறியியல் படிப்புகளுக்கான முதற்சுற்று கலந்தாய்வு – கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்புகளில் சேர ஆர்வம்!

தமிழக கோயில்களின் வரவு செலவு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – இந்து முன்னணி செயற்குழுவில் தீர்மானம்!

கிட்னிக்கு ரூ. 5 லட்சம், திருச்சியில் அறுவை சிகிச்சை – வெளியானது ஆடியோ!

ஸ்ரீபெரும்புதூர் அருகே வேறொருவருடன் பழகிய காதலி – கொலை செய்த காதலன்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்!

வாகன விபத்து குறித்து தவறான தகவல் பரப்பியதாக புகார்- மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் – 104 பாலஸ்தீனியர்கள் பலி!

கீழ் திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர்!

நீர் வரத்து உயர்வு – குற்றாலத்தில் எந்த அருவியில் குளிக்கலாம்?

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

திருக்கோவிலூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

ஆடி கிருத்திகை – அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்!

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடி மாத கூழ்வார்த்தல் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies