சென்னை வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜகவினர் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இதையொட்டி வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வரவேற்பளிக்க ஏராளமான பாஜக தொண்டர்கள் சாலையில் திரண்டனர்.
தொடர்ந்து சென்னை விமான நிலையம் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.
தொடர்ந்து வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷா, விமானம் மூலம் டெல்லி திரும்பினார்…