கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் தங்க செயினை திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் லீலாவதி என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணித்துள்ளார். அப்போது வெள்ளமடம் அருகே வந்து கொண்டிருந்தபோது லீலாவதி அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை காணவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவர் கூச்சலிட்டதையடுத்து பேருந்து அருகில் உள்ள வடசேரி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக போலீசார் சக பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தும் நகையை கண்டுபிடிக்க முடியவில்லை.
விசாரணையில் நகையை திருடியவர் மூதாட்டியுடனே பயணித்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.