கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ஒரு கடைக்கு சீல் வைத்தனர்.
அருமனையில் உள்ள உணவகங்கள் மற்றும் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அழுகியிருந்த உணவுப் பொருட்களை அதிகாரிகள் குப்பையில் போட்டு அழித்தனர்.
தொடர்ந்து 7 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஒரு கடைக்கு சீல் வைத்தனர்.