2025 -ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்னரே, சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 6 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டு, ஆயிரத்து 959 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
14 கிலோ கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி அன்று, எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன.
அந்த வகையில், இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. வணிக சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.