மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உருவப்படத்தை, அம்ரோஹாவைச் சேர்ந்த கலைஞர் ஜுஹைப் கான் என்பவர் நிலக்கரி கொண்டு சுவரில் வரைந்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனையொட்டி, உத்தரபிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த கலைஞர் ஜுஹைப் கான் என்பவர், சுவரில் 8 அடி நீளம் கொண்ட நிர்மலா சீதாராமனின் உருவப்படத்தை நிலக்கரி கொண்டு வரைந்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், நமது நாட்டின் ரூபாய் மதிப்பு வலுப்பெற வேண்டும் என்பதற்காகவும், நாடு மேன்மேலும் வளரவேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த முயற்சியை தாம் செய்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.