பட்ஜெட்டில் தனிநபர் மாத ஊதியம் அல்லாமல், மூலதன ஆதாயம் உள்பட பிற வகையில் பெறப்படும் வருமானத்துக்கான வரி வீதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 4 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 4 லட்சம் முதல் 8 லட்ச ரூபாய் வரை 5 சதவீதமும், 8 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதமும் வரிவீதம் திருத்தப்பட்டுள்ளது.
இதேபோல, 12 லட்சம் முதல் 16 லட்ச ரூபாய் வரை 15 சதவீதமும், 16 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரை 20 சதவீதமும் வரிவீதம் திருத்தப்பட்டிருக்கிறது.
20 லட்சம் முதல் 24 லட்ச ரூபாய் வரையிலான மூலதன ஆதாயத்துக்கு 25 சதவீதமும், அதற்கு மேல் 30 சதவீதமும் வரி வீதம் விதிக்கப்படவுள்ளது. மேலும், வீட்டு வாடகை டிடிஎஸ் பிடித்த வரம்பு 6 லட்சம் ரூபாயாக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
தவிர, 2 சொந்த வீடுகள் வரை வரிச் சலுகைகள் பெறலாம் என்றும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.