விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டுகளின் உச்சவரம்பு 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் விவசாய திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
நாட்டின் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதே மத்திய அரசின் இலக்கு எனக்கூறிய அவர்,
நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தானிய உற்பத்தியை மேம்படுத்த 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,
தாமரை விதைகளுக்காக பீகாரில் புதிய வாரியம் அமைக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், கிஷான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகை 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், இதன் மூலம், நாடு முழுவதும் 7 கோடியே 70 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.