மத்திய பட்ஜெட் சாமானிய மக்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2025 – 2026ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், அனைவரின் கனவை நனவாக்கும் விதமாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சேமிப்பு, முதலீடு, வளர்ச்சி ஆகியவற்றை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் அனைத்து வகையான வேலைவாய்ப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.