நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், வரும் 2047-ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சியடைந்த பாரதமாக உருவெடுப்பதற்கான அடித்தளம் அமைப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில்,
தோல், காலணி துறைக்கான முக்கியத்துவத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 22 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும். பருத்தி, ஆயத்த ஆடை துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
கடந்த ஆண்டில் பிரதமர் அறிவித்த 5 திட்டங்களால், இளைஞர்கள், பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
பிரதமரின் 5 திட்டங்களால் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, வருவாய் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டது.
வருமானம் அதிகரித்தாலும், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதால், இளைஞர்களுக்கு ஏராளமான பயன் கிடைக்கும்.
சாமானிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகுந்த பலனளிக்கும் பட்ஜெட்டால், சந்தையில் தேவை அதிகரிக்கும், இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் உயரும், வரும் 2047-இல் இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதமாக உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.