மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதை பார்க்கலாம்.
புற்றுநோய் மற்றும் அரியவகை நோய்களுக்கான 36 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மேலும் 37 மருந்துகளுக்கும் சுங்க வரி விலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
கோபால்ட், துத்தநாகம், லித்தியம் அயன் பேட்டரி உதிரி பாகங்கள் உள்ளிட்ட 12 தாதுப்பொருட்களுக்கு முழுமையான சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கப்பல் தயாரிப்பு மூலப்பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது. சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் தோல் பொருட்களின் விலை குறையவுள்ளது.
அதே நேரத்தில், IFPD எனப்படும் மிகப்பெரிய தொடுதிரைகளுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதன் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.