2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2024-25ஆம் நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு 4 லட்சத்து 54 ஆயிரத்து 773 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 4 லட்சத்து 91 ஆயிரத்து 732 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறைக்கு 2 லட்சத்து 66 ஆயிரத்து 817 கோடி ரூபாயும் உள்துறைக்கு 2 லட்சத்து 33 ஆயிரத்து 211 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கு ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 437 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 650 கோடி ரூபாயும் மருத்துவத் துறைக்கு 98 ஆயிரத்து 311 கோடி ரூபாயும்
தகவல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கு 95 ஆயிரத்து 298 கோடி ரூபாய் நிதியும் எரிசக்தி துறைக்கு 81 ஆயிரத்து 174 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்து மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு 65 ஆயிரத்து 553 கோடி ரூபாயும் சமூக நலத்துறைக்கு 60 ஆயிரத்து 52 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.