மதுரையில் வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் மல்லிகைப் பூக்களின் விலை கடும் ஏற்றத்தை கண்டுள்ளது.
வரத்து குறைவு காரணமாக மல்லிகைப் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ மல்லிகைப்பூ 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறியுள்ளனர்.
அதேபோல், முல்லை மற்றும் பிச்சிப்பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். செவ்வந்தி 250 ரூபாய், ரோஜாப்பூ 300 ரூபாய், சம்பங்கி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.