திண்டுக்கல் மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள திராட்சை கொடிகளில் பூவின்றி மலட்டுத்தன்மை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், A.வெள்ளோடு, செட்டியாபட்டி, அம்பாதுறை, சாமியார்பட்டி மற்றும் அம்மையாநாயக்கனுர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் வரை திராட்சை பயிரிடப்பட்டுள்ளது.
இவை, பங்குனி அல்லது சித்திரையில் அறுவடைக்கு தயாராகி விடும் என கருதி, ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். ஆனால், சாரல் மழை, பனியின் தாக்கம் மற்றும் இயற்கை மாற்றம் ஆகியவை காரணமாக திராட்சை கொடியில் 90 சதவீதம் பூக்கள் பூக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, இப்பிரச்சினைக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.