தஞ்சை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 657 காளைகள் மற்றும் 358 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம், மாதாகோட்டை லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு களத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியினை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தஞ்சை, திருச்சி, கோவை, அரியலூர், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 657 காளைகள் கொண்டு வரப்பட்டன.
6 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 358 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.