உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே போட்டுவிட்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, அங்கு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், சுற்றுலா வரும் நபர்கள் பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில், வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 35 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்தனர்.