கும்பமேளாவால் மாறிய வாழ்க்கை : கதாநாயகியாக உருவெடுக்கும் இணைய சென்சேஷன் 'மோனாலிசா'!
Sep 5, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கும்பமேளாவால் மாறிய வாழ்க்கை : கதாநாயகியாக உருவெடுக்கும் இணைய சென்சேஷன் ‘மோனாலிசா’!

Murugesan M by Murugesan M
Feb 2, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகா கும்பமேளா மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான மோனாலிசா போன்ஸ்லே, விரைவில் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்ப மேளா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. கும்பமேளா நிகழ்வில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், புனித நீராடி விமோச்சனம் பெறுவதற்காக பல சாதுக்களும், முனிகளும், கோடிக்கணக்கான பக்தர்களும் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

பிப்ரவரி 26-ம் தேதி வரை இந்த கும்பமேளா நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பிரயாக்ராஜிற்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில், மகா கும்பமேளாவில் பூ மற்றும் ருத்ராட்ச மாலைகள் விற்று வந்த மோனாலிசா போன்ஸ்லே, அவர் குறித்து இன்ஸ்டா பிரபலம் ஒருவர் வெளியிட்ட வீடியோவால் சமூக வலைதளங்களில் பிரபலமானார். மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த மோனாலிசா போன்ஸ்லேவுக்கு வயதோ வெறும் 16 தான். ஆனால், மிளிரும் மாநிறத்தில், மனதை பறிக்கும் கண்களுடன், தனது எதார்த்தமான அழகால் சில நாட்களிலேயே அவர் இணையவாசிகளின் சென்சேஷன் ஆனார்.

சமூக ஊடகங்களில் தொடங்கி, தேசிய தொலைக்காட்சிகள் வரை மோனாலிசா குறித்து வெளியான செய்திகள், பட்டிதொட்டியெங்கும் அவருக்கு புகழை தேடித்தந்தது. மோனாலிசாவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள நாள்தோறும் ஏராளமானோர் குவியத் தொடங்கிய நிலையில், அவரது புகழே அவருக்கு பெரும் தலைவலியாகவும் மாறிப்போனது. செல்ஃபி விரும்பிகளின் தொந்தரவால் மோனாலிசாவின் ருத்ராட்ச மாலை வியாபாரம் முடங்கிப்போக, மகளின் பாதுகாப்பு கருதி அவரின் தந்தை மோனாலிசாவை மூட்டைகட்டி சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பினார்.

ஊர் திரும்பிய மோனாலிசா போன்ஸ்லே புதிய இன்ஸ்டா மற்றும் யூ-டியூம் பக்கங்களைத் தொடங்கி, தனது ஒப்பனை வீடியோக்களை அதில் பதிவேற்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் சென்சேஷனான மோனாலிசா போன்ஸ்லே, மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் பிரபல பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ராவின் இன்ஸ்டா பதிவுதான். தான் எடுக்கவுள்ள “The Diary of Manipur” என்ற புதிய படத்தில், மோனாலிசாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளதாக சனோஜ் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

“The Diary of West Bengal” உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள சனோஜ் மிஸ்ரா தற்போது தனது புதிய படத்தின் கதாநாயகியாக மோனாலிசா போன்ஸ்லேவை தேர்தெடுத்துள்ளார். படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில், மோனாலிசாவையும், அவரது குடும்பத்தாரையும் அவர்களின் கிராமத்திற்கே சென்று படம் குறித்து விவரித்துள்ளார் சனோஜ் மிஸ்ரா.

எதிர்பாராமல் கிடைத்த பிரபலம் 16 வயதான மோனாலிசா போன்ஸ்லேவின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தை உருவாக்கி முன்னேற்றத்திற்கான கதவுகளை திறந்து வைத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: Kumbh MelaLife Changed by Kumbh Mela: Internet Sensation 'Mona Lisa' Becomes Heroine!
Share
Tweet
SendShare
Previous Post

மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்கள்!

Next Post

சென்னை : புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

Related News

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies